இரவுகள் எனக்குப் பிடித்தமானவை
பூஞ்சைக்காளான் பார்த்திருக்கீங்களா
குடைவிரிஞ்சு
குளிர்க்காலங்கள் ல புல்வெளிகள் ல அங்கங்க
அழகா மென்மையாப் பூத்திருக்கும்
ஒரு பெரிய காளான்
அதுப்பக்கத்துலேயே ஒட்டி ஒட்டாம இருக்கிற
மூணு நாலு,
சின்ன சின்ன குடை முளைத்திருக்கிற
குட்டிக் காளான்கள் என
குடும்பத்துடன் அழகா வீற்றிருக்கும்
அது பக்கத்துல போயி
மேலிருந்து அதைப்பார்க்கும்போது
அதனோட அழகு புலப்படாது
எங்கோ ஒரு தூரமிருந்து
அந்த புல்வெளி பரப்பில் படுத்து
நம் கண்களை கொஞ்சம் மேலெடுத்து உத்துப் பார்த்தோமானா
ஒரு மாய உலகம் போல தெரியும்
இதை கட்டெறும்புகளால உணரமுடியும்
கட்டெறும்புகளுக்கு
உணர்வுகளிருக்கா ன்னு தெரியல
கற்பனைப் பண்ணிக்கலாமே
ஹில் ஸ்டேஷன் சார்ந்த
புல் வெளிகள் ல
அங்கங்க பக்கம் பக்கமா பூஞ்சைக் காளான்கள்
குடும்பம் குடும்பமாக
நிறையப் பூத்திருக்கும் ஒரு பருவத்தில்
அந்த பூஞ்சைக் காலங்களின்மேல்
தேனூற்றி அதை
சாப்பிடுறப்போ
ஒரு விதமான போதைக்கலந்த
சுவைக் கிடைக்கும்
ம்ம் அந்த ரகசியம் எல்லோருக்கும் தெரியுமான்னுக் கேட்டா
தெரியாதுன்னுதான் சொல்லுவேன்
சிலர் அவைகளை
அதுப்பக்கத்துல போகாதீங்க
அது பாய்சன்
கைப்படும்போது உயிரைக்கொல்லும்
வேணாம்ன்னு ஒதுங்கிப் போயிடுவாங்க
சிலர் அதை
அழகா உடையாமத் பறிச்சு
ஒரு சின்ன பூந்தொட்டியில்
மண் நிறைச்சு
ஒரு போன்சாய் மரத்தை வளர்ப்பதுபோல
நீரூற்றி
அழகா வளர்ப்பாங்க
நானும் அப்படித்தான் ஒரு விதத்தில்
என்னைப் பத்தின
விமர்சனங்களை மறுக்கப் போவதில்லை
இந்த விமர்சனங்களுக்கு
செவி சாய்ப்பேனானால்
என்னைக்கோ திருந்திருப்பேன்
கொஞ்சநாள்
திருந்தாமதான் இருக்கேனே
அதனால என்ன இப்போ ம்ம்
எனக்கு இரவுகள் அதிகம் பிடித்தமானவை
புஞ்சைக் காளான்கள் இருக்குற புல் வெளிகள் ல
சில இரவுகள்
நண்பர்களோட இருக்கும்போது
அப்போது நேரும்
பனிப்புகாருக்கிடையே
மின்மினிகள் பறக்கத் தொடங்கும்
அந்த மின்மினிகள்
சட்டென்று வெளிச்சம் பிறக்க எழ
அவை அங்கேயே இருந்தனவா
இல்லை எங்கிருந்தோ வந்தனவா என்னு
தோணும் முன்னமே
அவை சூழ்ந்திருக்கும் இடங்கள் அழகாகிடும்
அந்த மின்மினி வெளிச்சம்
அங்குள்ள பூஞ்சைக் காளான்களின்மேல்
விழுந்து ஊடுருவுகிறபோது
குடைசாய்ந்த பகுதி நீல நிறமாவும்
தண்டு பகுதி
இளரத்தச் சிவப்பு நிறமாவும் தெரியும்
அந்த சூழல் அப்போ அவ்ளோ அழகா பிரதிபலிக்கும்
அனுசரன்