கவலை

அநீதிக்கெதிராய் குரல் கொடுத்தாலும்
அரசியல் வாழ்வு முடிந்தாலும்
மக்களின் உயிர் காக்க நச்சு
ஆலைக்கெதிராய் குரல் கொடுத்தாலும்
வஞ்சினம் கொண்டு வஞ்சகத்துடன்
ஆயுதம் ஏந்தி வெடிப்பதிங்கே
மக்களுக்கெதிராய் வன்முறை

குருதி சிந்தினாலும் இங்கே
குரல் கொடுப்போம் மனித உரிமைக்கு
உயிரிழந்தாலும் உரமிடுவோம் இங்கே
உண்மை எனும் பயிருக்கு

வீழ்ந்தாலும் இங்கே
வீறு கொண்டு எழுவோம்
எம்மை எரித்தாலும் இங்கே
புதிய எழுச்சியுடன் பிறப்போம்

ஆயுதம் துணை கொண்டு
அரியணை ஏறி ஆண்டவரெல்லாம்
வீழ்ந்து விட்டார் இங்கே
வரலாறு படைத்தது வாழ்வதிங்கே
வலிமை மிக்க மக்களின் மனமே.

எழுதியவர் : கருப்பு (5-Oct-18, 11:16 pm)
சேர்த்தது : ஆர் கருப்பசாமி
Tanglish : kavalai
பார்வை : 87

மேலே