ஹைபன் கவிதை
* இது ஒரு 'ஹைபன்' கவிதை
-------------------------------------------
அன்றைய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரம்
'ஹம்பி' சென்றடைந்தேன்;பிற்பகல் மூன்று மணி அந்த
க்ரானைட் குன்றுகளும், பாறைகளும் நிரம்பிய இன்றைய
ஹம்பியில் கால்போன போக்கில் நான் போய்க்கொண்டிருந்தேன்;
அங்கும் இங்கும் சில வெளிநாட்டவர், 'சுற்றுலா பயணிகள் சிலர்
உள்ளூர் 'guide ' களுடன் ......ஆங்காங்கே தெரியவந்தது இப்போது
க்ரானைட் பாறைகளிடையே, சிதைந்தும்,சிதையாமலும் காணும்
அன்றைய ஹம்பி.... மகாராணியின் குளியலறை...யானைகள்
குதிரைகள் அடைப்பு வீடு, 'தாமரை மஹால், அஹோவென்று
உயர்ந்திருக்கும் 'உட்கார்ந்த கோலத்து, உக்கிர நரசிம்மர் சிலை
கை, கால்களில் சின்னாபினம்..... சரித்திரம் பேசுகிறது
அதில்....... இன்னும் எத்தனையோ, எத்தனையோ வெளிநிற்கும்
புதைபொருட்கள்....அங்கு ....ஒரு பெரிய, மிகப்பெரிய
மயான நகரமாய் இன்று காட்சி தருகிறதே.....மனதில் கண்ணீர்..
இப்படி ஒரு 'மாயன் நகரை சூறையாடினாரோ .....
இப்படியே கால்போக.....எப்படியோ நான் அந்த அழகிய
கோவில் பிராகாரம் வந்தடைந்தேன்....அன்று சாம்ராட் க்ரிஷ்ணதேவ
ராயர் வழிபட்ட 'விருபாக்ஷேஸ்வரரர்' (சிவன்) ஆலயம்....
அழகிய கோபுரம் வடிவாய் நிற்க...மொத்தத்தில் அழியா சின்னமாய்
இருக்கும் கோவில்....உள்ளே சென்றேன் தரிசித்தேன்....இன்னும்
ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன....
கோவில் வெளியே நான் இப்போது... இருண்டவானம்...பரவிய
கார்மேக கூட்டம்.. இருள், இருள் ......அப்பப்பா பேரிடி ஓசை...
கொடிமின்னல் கண்பரிக்கும் கொடிமின்னல்............
நான் ஓரிடத்தில் தங்கி கண்களை மெல்ல மூட ...என் எண்ணங்கள்
அறுநூறு வருடங்கள் பின் சென்றது.......தலைக்கோட்டை யுத்தம்,
அழிந்தது விஜயநகர சாம்ராஜ்யம் ......பாமினி சுல்த்தான்கள்
சூறையாடல்......................
இருண்ட வானம்,இடி,மின்னல்
குதிரைகள் காலடி,யானைபிளிறல்
எங்கும் ஓலம்,ரத்த வாடை
(* : ஒரு ஹைபன் ஜப்பானிய கவிதை பாணியில் எழுதியுள்ளேன்
படித்து கருத்து தெரிவிக்கே வேணும்= உங்கள் வாசவன்;
ஹைபன் கவிதையில், முதலில், உரைநடை கவிதை வரிகள்
ஏதோ ஒரு சம்பவத்தை விவரிப்பது, அதை தொடர்வது ஒரு
ஹைக்கூ, அந்த சம்பவத்துடன் இணைந்தது)