இயற்கை

பகலவன் ஒளி
காரிருளைப் போக்கி
ஒளி பெருக்கி ஆயின்
சுட்டும் சுடாது
மானிடரை உய்விக்க ..............
மாக்கடலின் நீரை உறிஞ்சி
கார்மேகமாக்கி அதனுள்
மழை நீராய் இருந்து
காயும் மண்ணிற்கு
மழைப்பொழிந்து தாகம் தனித்து
மண்ணில் நாம் வாழ
உழவர் தம் தொழில் செய்ய
மழை எனும் கொடை
தரும் வள்ளல் பகலவன்

இளங் காலைப்பொழுதில்
தென்றலென மென்மையாய்
செங்கிரணங்களால் குவிந்த
கமலா மொட்டுக்களை ஸ்பரிசித்து
காதல் கொண்டு காதல் தந்து
மாமலரை மலர்ச் செய்கின்றான் பகலவன்

மங்கிய மாலைப்பொழுதில்
பகலெல்லாம் காய்ந்தது போதுமென்று
நினைத்தானோ , இல்லை கக்கிய
பெரும் அனலெல்லாம் தீர்ந்ததோ
அதை மீண்டும் பெற்றுவர
மேற்கே சென்று மறைந்தானோ
மாயோன் மாதவனைக் காண !

முற்றும் மறையும் முன்னே சூரியன்
மூடிய சந்திரனின் கண்களையும்
மெல்ல திறந்துவிட்டு செல்கின்றான்
அதில் தன ஒளியெல்லாம் பெருக்கி
அத்தின்களுக்கு பார்வை தந்து
பார்வையில் குளிர்தந்து இரவெல்லாம்
மானுடர் நமக்கு அவன் தன்னொளி
பெருக்கி நல்லொளி தந்திட

இத்தனையேன், முழுவதுமாய்
மறையும் முன்னே கதிரவன்
மெல்ல இருளும் அல்லவா பரப்பி மறைகிறான்
உழைத்து அயர்ந்த நம் கண்களை
தூக்கம் தழுவ ...................

மீண்டும் காலையில் பார்ப்போமா என்று
நெய்யாண்டி செய்து மறைகிறானோ
பகலவன்....... பார்ப்போமா மீண்டும் நாமும்
நாளை..................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-18, 9:11 am)
Tanglish : iyarkai
பார்வை : 838

மேலே