காடு வளம் காப்போம்

சாது மிரண்டால் காடு கொள்ளாது,
கரிகாலன் வெகுண்டதால் காடே தெறித்தது;

காட்டை அழித்து மக்கள் நுழைந்திட
விலங்குகள் வழித்தடம் மாறும்;

பல விலங்குகள் வெளியேறும்
நாம் பெறும் இன்னல்கள் பலவாகும்;

யானை மிரண்டால் ஊர் தாங்காது,
மைசூர் ஊர் தாங்காது;

நாடு வளம் பெற
காடு வளம் காப்போம்;

விலங்குகள், பறவைகள் பாதுகாப்போம்,
சுற்றுச் சூழல் மேம்படுத்துவோம்.

குறிப்பு:

ஜூலை 2011 ல் காட்டு யானை, தடம் மாறி மைசூர் ஊருக்குள் நுழைந்து, ஒருவரை மிதித்துக் கொன்றதாகவும் வந்த செய்தியினை அடுத்து எழுதிய கவிதை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-18, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : kaadu valam kaappom
பார்வை : 122

மேலே