என் தேசம் என் சுவாசம்
அக்கினிக்குஞ்சொன்றை
பொந்தினில் வைத்த
முண்டாசுப்பகலவா..
அக்கினி மிச்சமிருந்தால்
அஞ்சு வட்டிக்காவது
கொஞ்சம் கொடு!
பாராளுமன்றத்திலும்
சட்டமன்றத்திலும்
வைத்துவிடுகிறேன்!
செவ்வாய் தொடுகின்றது என் தேசம்!
பேரறிவைப் பெறுகின்றது என் தேசம்!
பேரிடர்வரின் மானுடத்தின் உச்சம் என் தேசம்!
இப்படியெல்லாம்
என் தேசத்தை நான் சுவாசிக்க
நடைபாதையில் நாளைக்கடத்தும்
சக இந்தியனைச் சந்திக்கையில்
மூச்சுத்திணறி
வெட்கித் தலைகுனிகிறேன்...
காலுக்குள் ஓடுகின்றன
கொழுத்த பெருச்சாளிகள்!
அக்கினி மிச்சமிருந்தால்
அஞ்சு வட்டிக்காவது
கொஞ்சம் கொடு!