தேவதையாய் நீ

கட்டிய மல்லிகை பூச்சரம் கூந்தலில்
பட்டுச்சே லைகட்டி செம்மே னியெழிலாய்
பொட்டுவைத்து புன்னகையில் ஆலய வாசலில்
தட்டில்பூ தேவதையாய் நீ

கட்டிய மல்லிகை பூச்சரம் கூந்தலில்
பட்டுச்சே லைகட்டி செம்மே னியெழிலாய்
பொட்டுவைத்து புன்னகையில் ஆலய வாசலில்
தட்டில்பூ தேவதையாய் நீஅழகாய் நிற்கிறாய்
தாங்கும் இதயமாய் நான்

---கவிச்சகோ பிரியாவின் பரிந்துரையை ஏற்று
இப்பொழுது பல விகற்ப பஃறொடை வெண்பாவாக,,.

எழுதியவர் : கவின் சாரலன் (13-Oct-18, 7:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : thevathayaai nee
பார்வை : 251

மேலே