என்னவளும், சந்திரனும்

என்னவளே உந்தன் முகம்
பௌர்ணமி முழுமதியாய்
பொலிவுடன் இதமான
குளுமையும் தன்னுள் கொண்டு
என்னை என் சிந்தையை
மயக்குதடி ...............


சந்திரனே, இப்படி நான்
என்னவள் முகத்தைக் காண
உன்னை இந்த பூமியின்
நிலவாய், பூமியிலிருந்து
மட்டுமே உன்னைக் காண ஆசை;
நாளை ஒரு போது இப்புவியிலிருந்து ,
நிலவே நேரில் உனைக்காண
ஓர் சந்தர்ப்பம் கிடைத்தாலும்
அதை ஒருபோதும் வேண்டுமென்பேன் நான்'
ஏனெனில் நேரில் அங்கு நான் உன்னை அடைய
அங்கு வெள்ளி நிலவாய் உன்னை நான் காண இயலாதே ,
வெறும் கல்லும் மண்ணுமாய் பெரும்
ராக்கத பள்ளங்கள் கொண்ட ஓர் உபகிரஹம் அல்லவோ
நீ இந்த என் பூமிக்கு .................
வேண்டாம், வேண்டாம், என் அருமைத் தங்கநிலவே
உன் முகத்தில் , உன் அழகில், உன் குளிரில்
என்னவளின் முகத்தைக் கண்டு அந்த
வடிவழகில் மயங்கி இருக்கும் நான்
உன்னை எப்படி வெறும் மண்ணாய் , கல்லாய்
மேடும் பள்ளமுமாய்க் காண்பேன் நான்,
என்றுமே நீ நான் மகிழும் அழகு நிலவாவே
இருந்துவிடு என் மனதில்.
கவிஞனின் கற்பனைக்கு என்றும் ஒளியாய்
கவிதை நாயகியாய் , நாயகனாய்
அவரவர் கற்பனைக்கொப்ப

என்னவளே , உன் முகம் நான்
மகிழும் நிலவின் முகம்தானோ ........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Oct-18, 5:58 am)
பார்வை : 194

மேலே