என்னவள்
என் மனதில் வந்து நிறைந்த பின்னே
என் மனதை விட்டு என்னைவிட்டு நீ ,
பிரிந்து போனதேனோ கண்ணம்மா;
என் மனதை வெற்றிடமாக்கி அதை
கண்ணீர் நிறைந்த கடலாக்கி
அதில் உன்னையே தேடி அலையும்
கடலலையாய் நான் ஓயாது 'அலைகின்றேனே
கண்ணம்மா, எப்போது நீ வருவாய்
இந்த கண்ணீர்க்கடலை துள்ளடைத்து
மீண்டும் என் மனதில் நிறைந்திடவே அன்றுபோல் .