சகியே

இன்பம் வேண்டும் மனதிற்கு
இன்பம் வேண்டும் சகியே!!
மங்கும் இருளிருந்தால்
மனதிற்கு இன்பம் சகியே!!
மங்காத புகழிருந்தால்
மனிதற்கு இன்பம் சகியே!!
இனித்திடப் பேசினால்
கேட்போர்க்கு இன்பம் சகியே!!
அணிஅணியாய் அழகுசெய்தல்
பெண்டிற்கு இன்பம் சகியே!!
அயராது நாளும் உழைத்தல்
ஆடவர்கு இன்பம் சகியே!!
மணிமணியாய் நெல் விளைத்தால்
மறையாது இன்பம் சகியே!!
பெற்றோரை சார்ந்து வாழ்தல்
மக்கட்கு இன்பம் சகியே!!
உற்றார்க்கு உதவி வாழ்தல்
உயர்ந்தோர்க்கு இன்பம் சகியே!!
கற்ற தம் மொழியினால்
கவிஞனுக்கு இன்பம் சகியே!!
நன் மக்களாய் வாழ்ந்தால்
நாட்டிற்க்கு இன்பம் சகியே!!
நமக்குள்ளே பூசலிட்டால்
அந்நியர்கு இன்பம் சகியே!!
ஒற்றுமையாய் வாழ்ந்திட்டால்
ஓங்கும் இன்பம் சகியே!!