அன்பின் குளிர்ந்த வார்த்தைகள்

மறக்க முடிந்ததில்லை என்னால்
உன் அன்பின் குளிர்ந்த வார்த்தைகளை
உன் புல்லாங்குழல் இதயத்திலிருந்து
எழும் என் வாழ்வின் இசைகளான அவைகளை ..

என் மனதோடு நடனமாடின
கரங்கள் கோர்த்து உடன் ஆடின
வலிகள் நீக்கி வழிகள் தந்தன
புது மொழிகளாய் மனதை தின்றன

மறக்க முடியவில்லை
இப்போதும் என் காதருகில் ஒலிக்கும் அவைகளை
இப்போதும் என் கண்களில் நீர் கோர்க்க செய்யும் அவைகளை
இப்போதும் உனது இருத்தலை பறைசாற்றும் அவைகளை
மறக்க முடியவில்லை
உன் அன்பின் குளிர்ந்த வார்த்தைகளை

எழுதியவர் : பா.நிபி (21-Oct-18, 11:05 am)
சேர்த்தது : பா நிபி
பார்வை : 67

மேலே