நட்பு

ஒரு அழகிய தீவில் கழுதை ஓன்று வசித்து வந்தது.அதன் பெயர் இராஜா.பெயருக்கு ஏற்றாற் போல் அதுவும் நாட்டை ஆளும் இராஜா போன்று அந்த தீவையே சுற்றி வந்தது.அதற்கு நண்பர்களும் அதிகம்.அதனுடைய நண்பர்கள் மிகவும் நல்லவர்கள்.இராஜா நண்பர்களோடு சேர்ந்து மேயும்.பிறகு அவர்களோடு விளையாடும்.இவ்வாறு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.அதற்கு திடீரென சலிப்பு வந்துவிட்டது.எவ்வளவு நாள்தான் இந்த தீவிலேயே வாழ்வது.வேறு தீவுக்கு சென்று வாழ வேண்டும் என ஆசைப்பட்டது.
நண்பர்களிடம் நாம் வேறு தீவுக்கு சென்று வாழலாம் எனக் கூறியது.அதற்கு இராஜாவின் நண்பர்கள் புது இடத்திற்க்கெல்லாம் நாங்கள் வரமாட்டோம்.நீயும் போகாதே என அறிவுறுத்தின.இராஜா நண்பர்கள் கூறிய எதையும் பொருட்படுத்தவில்லை . ஒரு நாள் நண்பர்களிடம் நான் வருகிறேன் எனக் கூறிவிட்டு நீரில் இறங்கி வேகமாக நீந்த ஆரம்பித்தது.நீந்தி மறு தீவை அடைந்தது.எங்கும் பச்சைப்பசேல் என அந்தத் தீவு காட்சியளித்தது.முட்டாள் நண்பர்கள் அழைத்தும் வரவில்லை சே என திட்டி தீர்த்தது.
அங்கிருந்த வயலில் நன்றாக சாப்பிட்டு,சாப்பிட்டு கொஞ்ச நாளிலேயே நன்றாக கொழுத்து குண்டாகி விட்டது.அதற்கு நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை.பரவாயில்லை என தனியாக சுற்றி சுற்றி விளையாடியது .ஒரு நாள் உழவன் ஒருவனிடம் அகப்பட்டுக் கொண்டது.அவன் அதனிடம் நாள் முழுவதும் நிறைய வேலைகள் தந்தான்.ஆனால் அதற்கு ஏற்றாற்போல் உணவும் இராஜாவிற்கு கொடுக்கவில்லை.உழைத்து,உழைத்து ஓடாகிப்போனது.தப்பித்து செல்ல நல்ல சந்தர்ப்பம் ஒன்று அதற்கு கிடைத்தது.விட்டால் போதுமென்று வேக வேகமாக நீந்தி தன் தீவை வந்து அடைந்தது.தன் நண்பர்களை கண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்டது.அவையும் கண்ணீர் வடித்தன.நீங்கள் என்னுடைய நல்ல நண்பர்கள் இனி எப்பொழுதும் உங்களை விட்டு பிரிய மாட்டேன் என சத்தியம் செய்தது.மீண்டும் இராஜா தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தது. எப்பொழுதும் நல்ல நண்பர்களின் அறிவுரையை ஏற்க வேண்டும்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (22-Oct-18, 10:41 am)
Tanglish : natpu
பார்வை : 851

மேலே