அறிவுரை

உன் தவறுகளை எடு!

சுயசிந்தனை நீர்கொண்டு
நேர்மையெனுஞ் சவர்க்காரமிட்டு
அலசிக் கொள் - அவை தம்மை!!

வருத்தங்கள்
பொடிப்பொடியாகி,
தூய தெரிவுகள்
துலங்கும் வரை
காயவிடு!!

பெருந்தன்மை எனும்
வாசனைநீர் சிமிறி,
மன்னிப்புக்களால்
மடித்து இஸ்திரி செய்!!

நினைவில் நிறுத்து:
“ நீ மகான் அல்ல, மனிதன்;
இதுவும் ஓர் வரமே!”
~தமிழ்க்கிழவி(2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (24-Oct-18, 4:18 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 487

மேலே