புற்று நோயென்னும் பேயே
![](https://eluthu.com/images/loading.gif)
நீ வரையறுக்கப் பட்டவள்!
எல்லையில் பேரன்பை
உன்னால் முடக்கவியலாது
தொல்லைசெயு(ம்) நினைவுகளை
உன்னால் துரத்தவியலாது
எந்தன் நம்பிக்கைதனை
உன்னால் தகர்க்கவியலாது
என்றுமென் அமைதிதனை
உன்னால் குலைக்கவியலாது
உறுநட்புகள் தமை
உன்னால் உடைக்கவியலாது
வீறுகொள் தைரியத்தை
உன்னால் வேரறுக்கவியலாது
அழிவில்லா ஆன்மாவை
உன்னால் ஊடுருவவியலாது
நிலையில் இவ்வாழ்வை
உன்னால் களவாடவியலாது
ஏனென்றால்...
நீ வற்றாத வரமல்ல
வரையறுக்கப் பட்டவள்!
புரையோடி யென்னுள் பாவும்
புற்று நோயென்னும் பேயே!!
~தமிழ்க்கிழவி(2018)