தந்தைக்கொரு வாழ்த்து

நேர்வழி நின்றொழுகி
நீரமைத்த வழியதனில்
சீர்பெற எமை வளர்த்தீர்!
காலத்தின் மாற்றங்களோ - யுத்த
கோலத்தின் கோரங்களோ
ஞாலத்தில் எமையணுகாமற் காத்தீர்!
இவள் தந்தை “எந்நோற்றான் கொல்” என
இவள் தன்னால் இயன்றளவு முயன்றேநும்
மகள் என்றுநீவிர் மார்தட்டி
அகம்குளிரச் சிறந்து வாழ்வாள்...
வையத்தில் வாழ்வாங்கு வாழும்வரைநல்
ஆயுள் உவகை ஆரோக்யம் மனநிம்மதி
எய்தியே நீவிர்வாழ ஏத்தினேன் இறைகழலை....
~தமிழ்க்கிழவி(2017)