ஒரு தாயின் சபதம்

அன்பு பண்பு மாண்பு
அறிவு தெளிவு பெற்று
உந்தன் உயர்வே கண்ணாய்
ஓடாய் உழைக்கும் உன்தாய்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க...

மன்பதை மீதினிலுந்தனுக்கு
மானுட மதிப்பே தாராத
உந்தை “ஐயகோ!
இந்த மகளையோ
நான் வெறுத்தேன்?”
என்றே நாணித் தலைகுனிய...

வேதனைகள் தமை மறைத்துச்
சோதனையாவுமுன் அன்னை தாங்கிடச்
சாதனைநீ புரிந்திட
வேண்டுமடி தங்கமே!

எங்கள் இருவர்க்கு
ஈங்குவந்த இந்நிலை
எவர்க்குமிவ் வுலகிலினி வாரா
வரம் வேண்டும் எனதிறையே!!

~தமிழ்க்கிழவி(2012)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (25-Oct-18, 9:06 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1609

மேலே