அம்மா

“ஆறுக்கெணை” எண்டால்
அஞ்சுக்கே வந்தெழுப்பி,
“ஆறாச்சு மோனை” எண்டு
தலைதடவும் அலாரமொண்டு...!
#அம்மா
~தமிழ்க்கிழவி(2018)

யாழ்ப்பாணத் தமிழ் வழக்கு:
“எணை” - வயதுக்கு மூத்த(பெண்)வரை விளிக்கும் சொல்
“மோனை” - (ஆண்/ பெண்) பிள்ளையை விளிக்கும் சொல்
“அஞ்சு” - ஐந்து

எழுதியவர் : தமிழ்க்கிழவி (26-Oct-18, 4:23 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 4504

மேலே