நீ

என் முடிவில்லா
முற்றுப்புள்ளி
நீ

என் தீர்க்கமுடியாத
தாகம்
நீ

நான் பருகியும்
பசியடங்கா
அமிர்தம்
நீ

என் தேவையும்
தேவைக்கு மேலும்
அறிந்தவன்
நீ

எனை சுலபமாய்
கையாளத் தேர்ந்த
வித்தகன்
நீ
புவி

எழுதியவர் : புவி (25-Oct-18, 11:51 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : nee
பார்வை : 568

மேலே