ஹார்ரி பாட்டர் ஸ்டைல் கற்பனையில் அவள்

நேற்றய கட்டழகி அவள்
இன்று முதுமைத் தாக்க
பொலிவிழந்த முகம்
வற்றிய தேகம்
நரை முடி ...............இப்படி
மூப்பு வந்து தாக்க
மிகக் கண்ணாடியில்
அவள் தன உருவைப்
பார்த்து பார்த்து
மனதால் நொந்துபோனாள்
தனுக்கு தானே சொல்லிக்கொண்டாள்
'இந்த நுங்கு மீன் வாழ்வில்
முதுமை அடையாமலே
இருக்க வைத்துக்கொள்கிறதே
இத்தனைக்கும் அதற்கு
மூளை, ரத்தம் ஏதும் இல்லை;
ஆறறிவு படைத்தும் இந்த
நிலை நான் எய்தமுடியலையே'

இறைவா இந்த மூப்பை நீ
வாங்கிக்கொள் எனக்கு
என்றும் இளமை வேண்டும்
தந்திடுவாயா ? " அப்படியே
கற்பனையில் மிதந்து
'ஹார்ரி பாட்டர் ' ஸ்டைலில்
ஒரு மனித 'ஜெல்லி-பிஷ்'அதாவது
'நுங்கு மீன்.' ஆனாள் அதில்
தன இளமை மீண்டும் திரும்பியதைக்
கண்டாள்.......... ஆனந்தமடைந்தாள்
கற்பனை கலைந்தது,கனவும் போனது

மீண்டும் நிலைக்கண்ணாடி முன் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Oct-18, 7:11 am)
பார்வை : 71

மேலே