செம்மலரே

உன் அடர்நிறம்
எங்கிருந்து பெற்றாய்
செம்மலரே.....??

அந்தியாதவன் கீழ்வானம்
கிழித்து மறையும்
செவ்வானச் சிதறல்களில்
எடுத்தாயோ.....??

காந்தக்கண் ணழகி
அவள் மேனி காதல்கண்
தீண்டச் செக்க சிவந்த
அவள் வெக்க கன்னம்
தோய்த்தாயோ....??

கண்முன்னே மண்ணும்
மானமும் பறிபோக
விழித்துக்கொண்ட தமிழனின்
சிவந்த கண்களில்
கிடைத்ததா....??

உரிமைக்காக போராடும்
அப்பாவி மக்களை
தோட்டாக்களுக்கு இரையாக்க
பீறிட்ட குருதியில்
நனைத்ததா....??

எங்கிருந்து பெற்றாய்
இவ்வடர்நிறத்தை.....
செம்மலரே.....




 

எழுதியவர் : முகில் (30-Oct-18, 10:26 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 42

மேலே