நம்​ ​தலைமுறை காணுமா

​-------------------------------------
உழுதவன் அழுகிறான்
உணவுக்கு அலைகிறான்
உயிர்வாழ துடிக்கிறான்
உலகையே வெறுக்கிறான் ...

ஏழையோ ஏங்குகிறான்
ஏக்கத்தால் உருகுகிறான் ​
​ஏற்றமின்றித் தவிக்கிறான்
ஏய்ப்பவனோ உயர்கிறான் ...

​படித்தவனும் தேடுகிறான்
பம்பரமாய் சுழல்கிறான்
பணியின்றி வருந்துகிறான்
​பட்டினியால் சாகிறான் ...

​உழைப்பவன் தேய்கிறான்
உண்மையாய் வாழ்கிறான்
உள்ளாற்றல் மறக்கிறான்
உள்ளத்தால் சாய்கிறான் ...

சுழன்றிடும் புவனமும்
நின்றிடுமா ஒருநாள் ?
தீர்க்கப்படா தீர்வுகளும்
நீர்த்திடாமல் தீர்ந்திடுமா ...

கவலையே எனக்கு
கறைபடா கரம்காணவே !
நம்தலைமுறை காணுமா
நம்பிக்கை குறையுதே !


பழனி குமார்
01.11.2018

எழுதியவர் : பழனி குமார் (2-Nov-18, 2:36 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 498

மேலே