சங்கு

சங்கு
மலர் என்பார்
பக்தர்
சங்கு
கழுத்து என்பார்
புலவர்
சங்கு
வலம்புரி என்பார்
மூழ்கி எடுத்தவர்
சங்கே
முழங்கு என்பான்
ஆசான் பாரதி தாசன்
சங்கை
முழக்கி நின்றான்
கீதையின் கண்ணன்
சங்கு
அதிகாலையில்
ஆண்டவனை
துயில் எழுப்பும்
இறந்துவிட்டால்
இறுதி ஊர்வலத்தில்
இரட்டையாய்
ஒலிக்கும்
சங்கு
சுட்டாலும் வெண்மை தரும் சங்கு
உடல் சுட்டு விட்டாலும்
ஆத்மா ஒளி பெரும் என்று
அறம் உரைக்கும் சங்கு
-----கவின் சாரலன்