அறிவாள் நையாண்டி மேளம் 2

ஒப்பனை அறிவாள்
சமையல் அறியாள் ;

இணையம் அறிவாள்
சுற்றம் அறியாள் ;

வாட்ஸ் அப்பில்
அரட்டை

விருந்தினர்வரின்
பேசா மடந்தை ;

பணியிடத் தலைமைக்கு
வேலைக்காரி

வீட்டுத் தலைமைக்கு
எதிராளி ;

ஆடல் பாடல் தெரியும்
கோலம் போடத் தெரியாது ;

அப்பா அம்மா
தெய்வங்கள்

அத்தை மாமா
அல்பங்கள் ;

சுத்தம் சுகாதாரம் உரக்க
அன்பு மரபு மறக்க ;

பாவம் , மாயை நாகரிகம்
வளர்த்த பெண் நீ !

எழுதியவர் : Dr A S KANDHAN (10-Nov-18, 12:49 am)
பார்வை : 59

மேலே