என்னவளுக்காய்
(யாழின் மொழியும்!!இசைவண்டின் நேர்விழியும்!! தன்னகத்தே கொண்டிருக்கும் என்னவளுக்காய் நான் எழுதும் ஓர் மடல் !!!)
தினம் காலை வேளையில்
உன் காதோரம் யாப்பிசைத்து
கவிதைப்பாடுவேன்! – தேவலோக
அமிர்தம் கொண்டு
உன் சோம்பலைப் போக்கிடுவேன்!
வண்ணமிகு மலர்களை
உன் வாசலில் தேக்கிவைப்பேன்!
உன் காலடி தொடும் நேரத்தில்
அம்மலரினை சொர்கத்திற்க்கு வழிநடத்துவேன்!
குளிரிலம் பனியை
உன் கூந்தலில் குடிவைப்பேன்!
உன் மேனி நீராட
காவிரியை கட்டியிழித்து
குளியல் தொட்டிக்குள்
கொட்டிவைப்பேன்! – உன்
பசிப்போக்க நறுபசுவின்
பாலேடுத்து அமுதூட்டுவேன்!
ஆழ்க்கடல் சென்று
முக்குளித்து உன் மூக்கிலிடுவேன்!
வருந்தென்றலுக்கு வலைவிரித்து
உன் வாசம் பார்க்க வார்த்தொடுப்பேன்!
கொன்றைமகள் விரல் பிடித்து
முகர்ந்திட்டு முத்தமிடுவேன்!
மென்மைமிகு மலர்தன்னில்
முத்தொளிநெய்து
உன் கையினில் அடக்கிவைப்பேன்!
பரிதியிலம் பாரினில்
எங்குருதியில் கலன் செய்து
உன் உடலோடு
நெசவிழைத்து சேலையாய் மாற்றுவேன்!
கருமுகிலை பிழிந்தெழுத்து
மயிரினில் சாயத்தை பூச்சிடுவேன்!
வானவில்லின் சாறேடுத்து
உன் நகத்திற்கு வர்ணம் தீட்டுவேன்!
சேற்றினில் தாமரையாய்
மங்கையவள் மேனியை
என் மார்போது சாய்த்திருப்பேன்!
உன் மீளாக் கண்னோரம் – நான்
விண்மீன் பார்ப்பேன்!
ஈரமான உததோரம்
ஈட்டினை எறிந்து
முத்தக்கடலில் மூழ்கடிப்பேன்!
சோலையிலே குயில் பிடித்து
உன் காதினில் கீச்சிடுவேன்!
உலக பூக்களின் வேர்களை
உன் நாசியில் நட்டுவைப்பேன்!
அருந்தென்பேன் உன் கனியுதட்டை!!
அவ்விதழினில் மொய்க்கும்
என்னிலடங்கா வண்டுகளை எட்டிப்பிடித்து
அக்கொடுக்கினில் நாவைத்து
நறுந்தேனை உறிஞ்சியிழுப்பேன்!
உன் கண்ணீரை கலனேடுத்து
பாலோடு சீனியிட்டு
நிதம் தினம் பருகுவேன்! – ஒருமுறையேனும்
உன் மலர்மேனி எம்மேல்
உரச
மர்ணித்தாவது உன் மடிசாய்வேன்!
-; இவன் ;-
புவபாரதி