ஒளியைத் தேடி

போலியை அறியவியலாத புரையோடிய கண்களும் காணக்கிடைக்காத கடாரம் கிடைத்தாற் போல தொடு கைபேசியில் அரைகுறையாக படித்துவிட்டு,
சமுதாயத்தைக் கெடுக்கும், இனவெறியைத் தூண்டும் சேதிகளைப் பரப்பும் மனம் கண்டேன்,
அங்கு இருளே நிறைந்திருக்க விலகி சென்றேன்.

நேசிக்காது போவாயோ? என்றே தேடி வந்து வம்பிழுப்போர்க்கு மத்தியிலே
நல்லவர்களை அடையாளம் கண்டு கருத்துகளோடு உரையாடும் மனங்களும் என்னை சூழக் கண்டேன்.
அவற்றிலிருந்து அறிவையெடுத்து நிரப்பிக் கொண்டேன்.

நிரப்ப நிரப்பத் தீராத பசியானது, தேடலை முடுக்கிவிட யாரைவிடவும் அதிக அறிவு தேவையில்லை, ஆனால், என் அறிவு திருப்தி அடையும் வரை அறிந்து கொள்ள வேண்டுமென்று உணர்கிறேன்.

போட்டிக்கு மேய்ந்தால் மாடுகூட முனை புல்லையே மெய்கிறது.
அதே மாடு வயிற்றை நிரப்ப மேய்ந்தால் முட்டுக்காலுக்கு புல் வளரந்திருந்தாலும் மொட்டாந்தரையாக்கி விடுகிறது.

அடிப்படை கல்வியாகட்டும்,
தொழிற்கல்வியாகட்டும், கலைக்கல்வியாகட்டும் கரைகண்டு கற்றோர் குறைவு.
முனைப்புல் மேய்ந்தாரே அதிகம்.
என்பதை நான் சொல்லவில்லை.
நம் செயல்களாலே உணர்த்திச் செல்கின்றன ஒவ்வொரு நொடியும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Nov-18, 4:00 pm)
பார்வை : 2087

மேலே