தமிழன்னை
கருவறை சுமந்த மழலையவள்
அமுதமொழி ஒரழகு ! - அவள்
திருவாய் மலரும் தமிழுளறல்
கான மொழியோ பேரழகு !
பொங்கி பெருகிடும் காவேரியவள்
தடைகொன்ற நடையழகு ! பாதையை
பங்கிட்டு செழித்திட்ட தமிழன்னைதன்
பசுமைப் போர்வையோ பேரழகு !