கவிதை அவள்
சந்தம் தோய்ந்த சொற்களால் அமைந்த கவிதை
படித்தாலே இசைக்கும் காதிற்கு இதமாக,
உள்ளத்திற்கும் உவகை தந்து;
கவிதைக்கு சொல்லழகு என்றால்
இவளுமோர் புத்தம்புது கவிதைதான்
வனப்புமிகு அங்கம் ஒவ்வொன்றால் வடிக்கப்பட்ட கவிதை
சுருதி சேர்த்து நரம்புகளை மீட்ட
இன்ப நாதம் தரும் வீணை
இவளும் ஓர் வீணை என்பேன்
தொட்டுவிட தொட்டுவிட கேட்கா
இன்பம் வந்திசைக்கும் மனதிற்குள்ளே
பேருவகை சேர்த்திடும் ஒலி அலையாய்