அன்பின் ஆலயம்
இதயங்களை ஒன்றிணைத்து
எழுப்புவோம் ஒரு ஆலயம்.
அமைதிதான் அங்கு அரியாசனம்
அன்புதான் அங்கே ஆளுமை.
நாடி வருவோர்க்கு நன்மையும்
வாடிச் சேர்பவர்க்கு அடைக்கலமும்
ஓடி வந்து உதவி செய்யும் ஓர்
ஆயிரம் கரங்கள் அங்கிருக்கும்.
கலங்கிடும் நெஞ்சுக்கு ஆறுதலும்
கண்ணீர் துடைத்து தேறுதலும்
பசியாற்றும் பரிவுமே
அந்தப் பள்ளியறை ஆராதனை.
பரிசுத்த நெஞ்சங்களை
பகுத்தறிவு எண்ணங்களை
பாசமுள்ள உறவுகளை
பண்புடன் சேர்த்திடுவோம்.
மழலைகளின் சிரிப்பு போல
மகிழ்ச்சி நமதாகட்டும்,
அணியணியாக இணைந்திடுவோம்,
அகிலம் கண்டு வியந்திடவே.......!!!