இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை ‘ --------’நானும்’ இயக்கம் Mee Too --------------கவிதை
ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.
மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?
மீன் 2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ
புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று
மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை
-பா.விஜய்