செவ்வாழைக் கால்களுமே
செவ்வாழைக் கால்களுமே
************************************************
செவ்வாழைக் கால்களுமே சிங்காரத்
தூண்களான உலகத்தின் கூரைநீயே
செவ்விதழ்கள் மாதுளையாய் பச்சரிசிப்
பல்வரிசை புன்னகைக்கும் பூவும்நீயே
சவ்வாது மெழுகிட்டு அசைந்தாடி
வரும்போது சுகமான நறுமணம் நீ
ஒவ்வாத செயல்தன்னை எவர்செய்ய
நேர்ந்தாலும் தண்டிக்கும் சட்டமும் நீ
சவ்வாக இழுத்தலைக்கும் மாந்தர்பணி
சீராக்கு கயிலையின் நாயகியே