பேரழகி

அவளை முதலில் பார்த்தவுடன்
சொக்கிப்போனேன் அழகினில்..
மூழ்கிப்போனேன் கனவுலகினில்...
மனதில் சிறகடிக்க ஆரம்பித்தாள்
என் கற்பனையால்...

காந்தம் போல் ஈர்த்திட்டேன் அவள்
கண்களின் கவர்ச்சியால்...

கரிய நிறமும் பிடித்துப்போனது அவள்
கூந்தலின் பொலிவால்...

வளையாத எண்ணம் வளைந்திட்டது அவள்
வளைந்த புருவத்தால்...

உளராத வாய்களும் உளறியது அவள்
உதடுகளின் அமைப்பால்...

முத்துக்களே இனி காண வேண்டாமென நினைத்தது அவள்
பற்களின் வரிசையால்...

வசீகரமே ஒரு நிமிடம் வழிந்து போனது அவள்
முகத்தில் மலர்ந்த புன்முறுவலால்...

ஒட்டுமொத்தமாய் ஒரு நிமிடம் உறைந்து நின்றது அவள்
அழகு தேக நடையின் நளினத்தால்...

இத்தனை அழகு பொருந்திய என்னவளை விட
ஒரு பேரழகியைக் கண்டேன்...

என் பால பருவத்தில் அவள்-உயிர் மெய்யை
உணரவைத்தாள் எழுத்துக்களால்...

என் இளமை பருவத்தில் அவள்- மொழியை அமுதமாய்
பருகவைத்தாள் உச்சரிப்புகளால்...

என் மணப்பருவத்தில் அவள்- வாழ்க்கை கற்றலில்
செம்மையாய் நின்றாள் இலக்கணத்தால்...

என் இடைப்பருவத்தில் அவள் -அனுபவம் பலவற்றை
தந்திட்டாள் சான்றோர் நூல்களால்...

இறுதியாய் என் முதுமைப்பருவத்தில் அவள்-நினைவில் அனைத்தும்
அசைபோட்டுக் கொண்டே,நான் அவள் அழகினை மேலும்
மெருகேற்றத் தொடங்கினேன் புது படைப்புகளால்...

அவள்தான் என்னை என்றும் அணைத்துக் கொண்டிருக்கும் என் தாய் !
அந்த அழகு உருவத்தின் பெயர்தான்...
தமிழ்! தமிழ்! தமிழ் !

எழுதியவர் : க வெ சரவணக்குமார் (18-Nov-18, 3:43 pm)
சேர்த்தது : SARAVANA KUMAR.K.V.
Tanglish : peralagi
பார்வை : 177

மேலே