வீசு தென்றல் காற்றாகி

வீசு தென்றல் காற்றாகி
************************************************

பாசமிகு கண்ணனை பரிசாக
கொண்டவளே பரிசுத்தம் ஆனவளே
கூசிடும் ஒளிதன்னை கண்களில்
தான்கொண்ட முக்கண்ணன் காதலியே
வீசுதென்றல் காற்றாகி சுகித்திடும்
இன்பத்தை அளக்காமல் அளிப்பவளே-உன்
அடியவர் அனைவரும் துன்பமின்றி
வாழ்ந்திட அருளீட்டு தாயவளே

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Nov-18, 3:35 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 63

மேலே