கோவலனும் கூடலிலே
கோவலனும் கூடலிலே
***********************************************
கோவலனும் கூடலிலே மரித்தவுடன்
கண்ணகியின் உடல்புகுந்த தீக்கனலே
கோவலனாம் சிவனுடன் அடியார்க்கு
காட்சியுற விடையேறும் வித்தகியே
பாவலர்க்கு பிழையிலா நற்றமிழை
நாவேற்றி நற்பதிகங்கள் தந்தவளே -- எங்கள்
கூவல் செவியேற்று தவறாது
அருள்கூட்டு காசிவிசா லாட்சியே