காதேற்ற லோலாக்கில் நடந்துநீ

காதேற்ற லோலாக்கில் நடந்துநீ
************************************************************
காதேற்ற லோலாக்கில் நடந்து நீ
வருகையில் அசைந்தாடும் தேர் நீயே
மாதான ஒருபாகன் உனைக்கண்டு
மனமகிழச் செய்தவளே சிங்காரமே
தோதாக தன்மடியை தோடுடையான்
உனக்கிடவே இன்புற்ற இன்பவல்லீ
ஒதுங்காது ஒதுக்காது பாமரனின்
வேண்டுதல்கள் ஏற்றுவிடு சக்தியவளே !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Nov-18, 4:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே