காணிக்கையாய் தந்தேன்

உன் முல்லை சிரிப்பு காண
முச்சந்தியில் தவம் கடந்தேன்
ஒரு நாளாவது உன் பார்வை
எனை தொடாதாவென ஏங்கினேன்
கோவிலில் உனைக் கண்டு
குதூகலித்த என் மனம் கண்டேன்
உனைப் பின் தொடர்ந்த போதெல்லாம்
உன் சொந்தங்களிடம் எனை மறைத்தேன்
நீ விளக்கேற்றும் போதெல்லாம் நானும்
கோவிலை சுற்றி சுற்றி வந்தேன்
உன் இசைவு கண்டு நானும் எனையே
உனக்கு காணிக்கையாய் தந்தேன்