காதலியே காதலியே
எழிலே எழிலின் பொழிவே
அமுதே உயிரின் நிறைவே
முகிலே நிலவின் பொலிவே
தனியே நானும் தனியே
நினைவே உன்னின் நினைவே
மனதை ஆக்குது பிணியாய்
கனிவாய் நீயும் கனிவாய்
வருவாய் நீயென பெரிதாய்
உரிதாய் எனக்கென உரிதாய்
உரிமையில் நிற்கிறேன் தனியாய்
உறவாய் நீயும் உறவாய் - வந்தால்
உனதான வாழ்க்கை உயர்வாய்
தருவாய் அவ்வுரிமை தருவாய் - இது
அரிதாய் நடக்கும் நிகழ்வாய்
அமையும் எந்நாளும் அறிவாய் .
_ நன்னாடன்