சாதீ
ஆலமரக் கிளைகளெல்லாம்
விழுது செய்து - விழுதுகள்
வேரூன்றிப் பரவி
பெரு விருட்சமாதல் போலே
எங்கும் பரந்து விரிகின்றாய்
முன்னாளில் உனக்குப்
பெயரிட்டவன் தீர்க்கதரிசி
இந்நாளில் உன்னை
இறுகப் பற்றினாலும்
உதறி தள்ளினாலும்
சா(க) தீ வைக்கிறாய்.....

