பெயரிடப்படாத உருவகம் இது
மலங்களை கூட்டுப் புழுவாய் அடைகாத்து நொயுண்ட உள்ளத்தோடு வாயிலுதித்ததை பேசித் திரிகையில் அடைகாத்த மலங்களின் நாற்றமும் வார்த்தைகளாய் வெளிப்பட சமுதாயத்தை நோய்களுக்குள் ஆழ்த்துகிறதே!
என்னவென்று சொல்வேன்?
யாரென்று சொல்வேன்?
அறிவுச்சுடராய் சிந்தனைக் கதிரவனையும் மலங்கள் கரையான்களாய் புற்று கட்டி மறைக்க புத்தியை வாடகை விட்டோராய் நைந்து நைந்து கூனி குறுகி நிமர்ந்து நிற்க வழியறியாது வீழ்ந்துகிடக்கிறோம்.
சிந்தனையை நல்வழி செலுத்தி நற்கருத்துகளை உரைப்போரையும் உனக்கென்ன அதிக தெரியுமோடா என்றே வசைபாடி விழ்த்திவிடுகிறோம்.
நடக்கும் கால்கள் ஒன்றுக் கொன்று துரோகம் செய்தாலே நடப்பது சாத்தியமோ?
மண்ணைக் கவ்வும் நிலை வராதோ?
தேடி பயின்றே தெளிவைப் பெற்று கூட்டத்தாலே மங்கிப் போக மூளை மழுங்கிய எழுதுகோல் முனையாய்
உரியோ உரியோ என்றே ஊரோடு கத்துவதைக் காணுகையில் மனம் பதைக்கிறது.
தனக்கு தலையிருக்க வேறொன்று தனக்கெப்படி தலையாகும் என்றே சிந்தியாமல் தன் வாழ்வை அடுத்தவர் சூரையாடியதாய் சூளுரைந்துக் கரைவது கொடுமையிலும் கொடுங்கொடுமையடா.
மலங்கள் நீங்கியே நாம் எழுவது எப்போது?
அறிவுச்சுடரை விழிக்கச் செய்கையிலே நிமிர்ந்து நிற்கும் தெம்பு பிறந்திடும்.