வனவாசம்

வனவாசம்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

மனித மனங்கள்
வனவாசம் கண்டால்
கண்ணுக்கும் கருத்துக்கும்
காணக் கிடைக்காத
கானக இயற்கை விருந்து !

வனாந்தரத்தில் காற்றில்
வட்டமிடும் வண்டுகள்
கூட்டமாக பறக்கும்
சிறகடிக்கும் பறவைகள்
இன்ப ஒலி அலைகள்
இனிய இசை சூழ்ந்து
வனவாசம் மனித மனதே
அமைதி அடைகிறது !

வனவாசத்தில் சுவாசித்தால்
மணமிக்க மலர்களோடு
சந்தன மரங்களோடு
நாசியும் வாசியும்
நறுமணம் பெறுகிறது!

வனவாசம் சென்று
வாய் மலர்ந்து பேசுவதெல்லாம்
வாய்மை இனிமை தூய்மை
வனவாசத்தில் வாயே
வண்ணமலர் வாசம் வீசும்!

வனவாசம் சென்றால்
மெய்யே பொய்யென்று
உலகே மாயமென
உணர வைக்கும்
உள்ளம் அமைதி பெறும்!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (1-Dec-18, 11:37 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : vanavaasam
பார்வை : 138

மேலே