இயற்கை

மயக்கும் மாலை நேரம்
தென்னங் கீற்றில் சிட்டுக்குருவி
வந்தமர தென்றல் வந்து தாலாட்ட
சிட்டுக்குருவி கூட ஆடாது அசையாது
தாலாட்டில் மெய்மறந்து தூங்கியது

இரவு வந்தது எனோ தென்றல்
புயலாய் மாறியது ஓ ஓ வென்று
ராக்கத கூச்சல் போட்டு எட்டு திக்கும் அலற
நேற்று அள்ளி அணைத்து தாலாட்டுப் பாடிய
தென்னை மரங்களை சாடி வேரோடு சாய்க்க
புயலும் சற்றோய்ந்து அமைதி வந்தது
தென்னந்தோப்பிற்கு சென்ற நான்
ஸ்தம்பித்தேன்; நேற்றைய தோப்பு இன்று
நெடுக சாய்ந்த மரங்கள் கொண்ட
மயானம் போல் காட்சி தந்ததே , அதில்
நேற்று தாலாட்டில் மயங்கி தூங்கிவிட்ட
சிட்டுக்குருவி தூக்கத்திலேயே துஞ்சியதோ!
பாவம் மழையில் நனைந்து இறக்கைகள் சிதிலடைந்து
சின்னாபின்னமாய்க் கிடந்தது அங்கு
அந்த தென்னகக்கீற்றில் நேற்று நான் பார்த்த
அந்த சிட்டுக்குருவி ,
என் மனதில் சொல்லொணா வேதனை;
அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்
இயற்கையே உந்தன் அணைக்கும் கைகள்
இப்படி அடித்தால் தாங்குமா இந்த சமுதாயம்
உந்தன் சீற்றத்தைக் குறைத்துக்கொள்ள
எங்கள் சமுதாயம் இன்னும் வாழ்ந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-18, 3:13 pm)
Tanglish : iyarkai
பார்வை : 618

மேலே