வஞ்சித்து ஏன் இப்படி
வான்கூரை அழகுதான்
நுரைநுரையாய் மேகங்கள்
அனுதினமும் இரசிக்க செய்யும்
அடிமைகள் எண்ணிலடங்கா
ஒன்பது கோள்கள் போதாதென்று
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்
இரசாயன மாற்றங்கள்
பருவநிலை மாற்றம்
பருவப் பெண் நீலாம்பரியாக
தாங்குமா சுற்றிவரும் பூமி
வயிற்றுப் பிழைப்புக்கு
வயலை உழுதவன்
வாழ்விழந்து தவிக்கிறான்
முற்றி தலைசாய்த்த
கரு கொண்ட நெல்மணிகளோ
பூமிக்கு இரையாக
குலுங்கி குலுங்கி தலையசைத்து
குடிமக்களை வாழவைத்து
புல்லினத்திற்கு கூடான
வான்உயர்ந்த மரங்கள்
வலுவிழந்து வேர்சாய்த்தன
வறுவதென்ன போவதென்ன
வாழ்வதென்ன சாவதென்ன
வஞ்சித்து ஏன் இப்படி
செந்நீரே கண்ணீராக
கரை காணாமல்
துன்பம் எனும் கடலில்
துடுப்புகளை இழந்த படகாக!!!