காதல்
உன்னையே சுற்றிச் சுற்றி
வளையவருகிறேனடி பெண்ணே
உந்தன் மாய விழிகளின் பார்வையின்
மையலின் தாக்கத்திற்கோர் அடிமையாய்
நீயோ என்னைக் கண்கொண்டு இன்றுவரை
பார்க்கவில்லை , இல்லை பார்த்தும்
பாராததுபோல் இருக்கிறாயோ தெரியவில்லை
ஆனால் ஒன்று மட்டும் என் அறிவுக்கு எட்டுகிறதடி பெண்ணே
' உன்னைச்சுற்றி வரும் என்னை நீ புறக்கணித்திருந்தால்
மீண்டும் மீண்டும் என்னெதிரே காட்சி தந்திருக்கமாட்டாய் என்று
அடியே என் அழகு மேனகையே எனக்காக உன் மனம்
கொஞ்சம் இறங்காதோ இறங்கி ஒருமுறை என் கண்ணோடு
உன்கண்களின் பார்வையில் சேர்த்துவிட்டு
உந்தன் செவ்விதழின் ஓரத்தில் புன்னகைத்தால்
உனக்கு என்மீது காதல் என்று அறிந்துகொள்வேன்
அந்த ஒரு கணம் மட்டும் கூட வாழ்ந்தால் போதுமடி
உன்நினைவிலேயே என்னுயிரை விட்டுவிடுவேனடி
விளக்கின் மையலில் மயங்கி வீழ்ந்திடும் விட்டில் போல்.. '