காண்டீப அம்பு

உயிரை ஆளுகின்ற உடலுக்கு
உணர்வுகள் ஆயிரமாம்
உள்ளுணர்வின் தேவைக்கே
பொன்னுடல் உழைத்திடுமாம்
கண்ணென்னும் கருவியால் - உள்ளத்தில்
கருவொன்று வளர்ந்து விட்டால்
காடென்ன மலையென்ன
கடுந்துயரென்ன மகிழ்வென்ன
கைக்கொள்ளும் நிலை வரையில்
காண்டீப அம்பைப் போலே
கச்சிதமாய் அடைந்து விடும்
கருவில் கொண்ட இலக்கைத் தான்.
...... நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (4-Dec-18, 6:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே