காதலில் கரைகிறேன்

நீ எப்போதும் வரும் பாதையில்
உனக்கு முன் வந்து காத்து கிடக்கிறேன்.
நீ எப்போதாவது வர தவறினாலும்,
அன்றைய நாளில் கூடுதலாய் காத்திருந்து கரைகிறேன்..

உனக்காக நீ வரும்வரை எனக்குள் காதல் காத்திருக்கும்.
ஆனால் நான் மட்டும் காலாவதியாகி கொண்டிருக்கிறேன்.

காத்திருத்தல் என்பது வரமா.. சாபமா..
அதையும் காத்திருப்பின் கடைசியில்தான் காலனிடம்தான் சொல்வாயோ..

எழுதியவர் : சையது சேக் (5-Dec-18, 12:41 am)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : kathalil karaigiren
பார்வை : 380

மேலே