முதலிரவு

முதலிரவு . . .

கடைசி வரி வரை கவன சிதறலை தவிர்க்கவும். . .

இது தான் முதல் முறை
தொட்டு கொள்வதும்
உரசி கொள்வதும்

எனக்கு பிடிக்கும்
என்னை பிடிக்குமா என்றால்
கேள்வி குறியே மிஞ்சி நிற்கும்

ஆடம்பரமாகவும் அல்ல
அதே சமயம்
அழகிற்கும் பஞ்சமில்லை

பார்த்து கொண்டே
தேனீர் பருகி கொண்டேன்

ஆர்வம் ஒரு பக்கம்
அசதி ஒரு பக்கம்
உறங்கவும் மனமில்லை
உடலும் ஒத்துழைக்கவில்லை

தூக்கம் வந்து
கண்ணை கட்ட
தேனீர் பருகி
சோம்பல் முறித்தேன்

கால்களால் நடந்தவன்
இப்பொழுது
பார்வையால் கடக்கிறேன்

பிடித்த இடங்களில்
அடம்பிடித்து நிற்கிறது
பார்வையும் மனமும்

யாருமில்லா தனியறையில்
இப்படி இருப்பதும்
ஒரு சுகம் தான்

திருப்பி திருப்பி
திரும்பி திரும்பி
பார்த்து கொண்டே இருந்தேன்

ஆவலும்
எதிர்பார்ப்பும்
அளவு கடந்து சென்றது

சந்தோஷம்
சோகம்
ஏக்கம்
தவிப்பு
பாசம்
காதல்
ஆசை
என அனைத்தையும்
ஒரு சேர உணர்ந்து முடித்து

அப்பாடா என்று
காலை சீக்கிறம் எழுந்திருக்க
அலாரம் வைத்து விட்டு
படுக்கும் முன்

இத்தனை
அழகாகவும்
ஆழமாகவும்
கவிதை நயத்துடனும்
எழுதிய கவிஞரை
மனதோடு பாரட்டியபடி

"முதலிரவு"
எனும் கவிதை தொகுப்பை
படித்து முடத்த
நிம்மதியோடு கண்மூடினால்

சில கவிதைகள்
மீண்டும் படிக்க
ஆவலை கூட்ட

நாளை மீண்டும் படிக்கலாம்
எனும் முடிவோடு
விளக்கை அணைத்தேன்

முதலிரவு நாளையும் தொடரும் . . .

எழுதியவர் : ந.சத்யா (5-Dec-18, 2:27 am)
Tanglish : muthaliravu
பார்வை : 503

மேலே