மார்கழி மாதம்

மாதமோ மார்கழி மாதம்.
தேசமோ குளிரான தேசம்.
உன் தேகமோ சூடான தேகம்.
என்னைக் கண்டுக்காமல்
போகலாமோ உன் பாதம்....../////

தடிப்பான போர்வைக்குள்ளே
என் உடல் இருக்கும்
வேளையிலும் கண்ணே
கனப்பொழுதாயினும் உன்
கரம் தேடுகின்றதே கண்ணே.....////

காற்றோடு சேர்ந்து வரும்
மழை மெதுவாக நுழைகின்றது
ஜன்னல் வழியே கண்ணே
நுழைந்த மழைத் துளியோ
என்னை மேவி விட்டு உன்னை
அழைக்கச் சொல்கின்றதடி கண்ணே..../////

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Dec-18, 12:53 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 224

மேலே