ஆன்மிகம்

கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?


தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே
தேங்காயை போலிருப்பான் ஒருவன்-அவனை
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்


என்று மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடுவார்கள்

அதாவது தேங்காயின் தத்துவத்தை புரிந்து கொண்டால் கடவுளை தெரிந்து கொள்ளலாம் என்பது தான் கவிஞரின் கருத்து

தேங்காயின் மேலிருக்கும் சிக்கல் மிகுந்த நார்பகுதி சமயங்களுக்கு மத்தியில் கிடக்கும் வாத பிரதிவாதங்களை குறிப்பதாகும்

உறுதியான சிரட்டை கடவுளை அடைய வேண்டும் என்ற நெஞ்சுறுதியை காட்டுவதாகும்

மதம் மாச்சரியங்களை கடந்து வந்தால் நெஞ்சுறுதி பிளந்து உள்ளே இருக்கும் கடவுளை காட்டும் என்பதே இதன் பொருள் நமது

இந்து மதத்தில் காரணம் இல்லாத காரியங்களே கிடையாது

தேங்காயை உடைத்து கடவுளுக்கு படைப்பது என் வெளி மனது சிரட்டையை போல் கெட்டியாக இருந்தாலும் உள்ளே இருக்கும் ஆத்மாவோ தேங்காயின் பருப்பு போல வெண்மையானது தூய்மையானது அதை நீ ஏற்று கொள் என்று சொல்வதாகவும் எடுத்து கொள்ளலாம்

அல்லது சிரட்டையை போல் என் மனம் கெட்டிப்பட்டு கிடக்கிறது அதை பருப்பு போல தூய்மையாக்கு என்று பிரத்தனை செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்

என் பாவம் தேங்காயை போல் உறுதியாக இருக்கிறது அதை உன்முன்னால் உடைத்து வைத்து விட்டேன் அதை ஏற்று தூய்மை படுத்து என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

அடுத்ததாக பூமிக்கு உள்ளே விளையும் பொருட்களை சாஸ்திரம் அகந்த மூலம் என்றும் மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் அழைக்கிறது

அதாவது அகந்த மூலப்பொருட்கள் மனிதனுக்கு தாமச குணத்தை உருவாக்கும்

கந்த மூலப் பொருட்கள் சத்வ குணத்தை உருவாக்கும்

தேங்காய் மர உச்சியில் உருவாகும் கந்த மூலப் பொருள் இதை கடவுள் பிரசாதமாக கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான சத்வ குணம் மேலோங்கும்

இதனால் தான் இந்து மத வழிப்பாட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது

==================================================================================================

குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியம

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் ஆகும்

அந்த காலத்தில் பிழைப்பை தேடி இடம்விட்டு இடம் மாறும்போது கூட தனது வழிப்பாட்டு தெய்வத்தின் ஆலய மண்ணையோ அல்லது வேறுவகையான புனித சின்னங்களையோ தான் புதிதாக வாழப்போகும் இடத்திற்கு எடுத்து சென்று வழிப்பாடு செய்வார்களாம்

தான் வணங்கும் தெய்வம் தன்னோடு எப்போது இருக்க வேண்டும் என்ற மனித அன்பின் வெளிப்பாடே இது எனலாம்

முப்பாட்டன் செய்ததை பாட்டன் செய்ததை என் தகப்பனார் செய்ததை நானும் செய்வேன் செய்ய வேண்டும் என்று உருவானதே குலதெய்வ வழிப்பாடாகும்

பல குடும்பங்களில் குல தெய்வம் என்பது கடவுளாக இல்லாமல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாக கூட இருப்பார்கள்

பரம்பரையாக செய்து வரும் வழிப்பாடுகளை நிறுத்தி விட்டால் தீங்குகள் பல ஏற்படும் என நம்பிக்கை உள்ளது

இது பலர் வாழ்வில் நடந்திருப்பதை அனுபவ பூர்வமாக நான் அறிவேன்

எனவே இஷ்ட தெய்வ வழிப்பாடு சரிதான் தொடர்ந்து செய்ய வேண்டியது தான் அதற்காக குலதெய்வ வழிப்பாட்டை விடுவது சரியல்ல



கோவில்களில் உள்ளதுபோல் வீட்டிலும் விக்கிரக பூஜை செய்யல்மா?
ராகுல் மும்பை

கடவுள் படங்களை விட சிலைகளே மனதை சுலபமாக ஈர்க்க வல்லது என பெரியவர்களும் அனுபவசாலிகளும் சொல்கிறார்கள்

அதனால் விக்ரக பூஜையை வீட்டிலும் செய்யலாம்

அப்படி செய்யும் போது சில நெறிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்

கோவிலில் இருப்பது போல பெரிய விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது

காரணம் ஆலயங்களில் கடைபிடிக்கும் எல்லாவகையான தர்மங்களையும் அப்படியே பிசகாமல் நம்மால் வீட்டில் அனுசரிக்க இயலாது

எனவே வீட்டில் வைத்து வழிப்படும் விக்கிரகங்களின் அளவு 11 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

இந்த அளவில் வைத்து வழிப்பட்டால் நல்லது நடக்கும் பிரச்சனையும் வராது









தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் துண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.கோவில்களில் பதிக்கப்பட்டுள்ள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது.

அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .












ஒரே இறைவன் , நாரணன் அவன்தான். அவன்மட்டும்தான் . மற்றபடி இஷ்ட தெய்வவழிபாடு , குலதெய்வ வழிபாடு எல்லாம் எனக்கு தெரியாது. இதில் தவறேதும் இருந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் கூறும் இந்த கருத்து என்னை பொறுத்த வரையில் தவறு என்று தான் சொல்ல வேண்டும் நமது ஹிந்து மதத்தின் அடிப்படை கொள்கையே இறைவனை தங்கள் விருப்ப உருவத்தில் அல்லது விருப்ப பெயரில் வழிபடுவதே....உங்களை பொறுத்த வரையில் நாராயனரே முழு முதல் கடவுள் அப்படி என்றால் சிவன் யார் ? அவர் கடவுள் இல்லையா ?......நான் வழிபடும் நாராயணன் தான் ஒரே இறைவன் என்று நீங்கள் கூறுவதிலும் கிறிஸ்துதான் எல்லோருக்கும் கடவுள் என்று கூருவோர்க்கும் உள்ள வித்யாசம் தான் என்ன ?...
பொதுவாக மனித பிறவியாய் பிறக்கும் எல்லோருக்கும் முழுமுதற் கடவுளை பற்றிய அறிவு ஒரே பிறவியில் கிடைபதில்லை இப்பொழுது உங்களுக்கு கிடைத்திருப்பது போல் ....அவர்களுக்கு படி படியாய் தான் விளங்கும்....உணமையான பரம்பொருளை அறிந்தவர் சிவன் விஷ்ணு பிரம்மா என்று வேறு படுத்தி பார்க்க மாட்டார்கள்...அவர்களின் பார்வையில் ஒரே பரம்பொருளின் அம்சங்களாய்த்தான் தெரியும்...அது போலவே குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் , நீங்கள் பகவத் கீதையை படித்துருபீர்கள் அதில் கண்ண பிரான் அழகாக கூறியிருப்பார் , இன்றைய காலகட்டத்தில் பொருட்கள் மீது ஆசைபட்டு மக்கள் முழு முதல் கடவுளை மறந்து தேவதையை வழிபடுகிறார்கள் ....அந்த அந்த தேவதையை வழிபட்டு அதற்கான பொருளையும் என்மூலமாக அந்த தேவதைகளிடத்தில் இருந்து பெறுகிறார்கள் என்று ....எனவே பரம்பொருளை பற்றி அறிவு வரும் வரையில் அவர்கள் அந்த இஷ்ட தெய்வத்தையோ குல தெய்வத்தையோ வழிபட்டுதான் ஆகவேண்டும்....ஏனெனில் செல்வங்களை தேடி வேறு எங்கும் அலையாமல் சிறு தெய்வங்கள் வழி பாட்டின் மூலம் அந்த பரம்பொருளின் தொடர்பில் இருக்கிறான் மனிதன் என்று நான் நினைக்கிறேன் இதில் தவறேதும் இருந்தால் என்னை மன்னிக்கவும் .....

இப்படிக்கு ,
சங்கர்


ராமானுஜரின் விசிச்ட்டவைதம் , மத்வரின்,துவைதம், மற்றும், ஸ்ரீ சைதன்யரின் அச்சின்த்ய பேத பேதம் ஆகிய தத்துவங்களை படித்து தெளுவு பெற வேண்டும்.இன்று நம் ஹிந்து மதத்தில் பெரும்பான்மை மக்கள் ஆதிசங்கரரின் அத்வைதம் கோட்பாட்டையே கடைபிடிகிறார்கள் , அத்வைதம் ஏன், எப்போது, எந்த காலசூல்நிலையில் உருவானது என்று நீங்கள், அறியவேண்டும்.

ஆதி சங்கரரின் காலதில், பாரதத்தில் புத்த மதம் தாக்கம் பற்றி அறிய வேண்டும். பிறகு,புத்த மதம் கூறும் தத்தவங்களை அறியவேண்டும். நம் வேதத்துக்கு முரணான் பல செய்திகள், புத்த மதத்தில் உள்ளன, நம் வேத சமயம் அழியும் நிலைக்கு வந்தது. அப்போதுதான் சிவபெருமானின் அவதாரமாக ஆதி சங்கரர் தோன்றி அத்வைதம் உருவாக்கினார் என்பதையும் அறியவேண்டும்.

அடுத்து , அத்வைதம் கோட்பாட்டை நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். வேதங்களுக்கு முரண்பாடான சில விசயங்கள, அத்வைதம் சொல்கிறது. பிறகு,ராமானுஜர் அதன் பிறகு,மத்வர் போன்றோர்,தோன்றி, அத்வைதம் கோட்பாட்டை மறுத்து , விசிச்ட்டாவைதம் ,துவைதம் போன்ற கருத்தை உருவாகினார்கள். இவைகளையெல்லாம் நன்று படித்து அறிந்து கொள்ளுமாறு உங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

ஒரு கீதை ஸ்லோகத்தை குறிப்பிட்டு சொன்னிர்கள்,தயவு செய்து , அந்த ச்லோகத்திட்கு அடுத்த சுலோகம் பகவான் என்ன சொல்கிறார் என்று பாருங்கள், உங்களுக்கு சில விஷயம் புரியும்.

பிரமமே சத்தியம்,ஜீவன் , உலகம் எல்லாம் பொய், மாயை,என்றும் மற்றும் ஷன்மதம் உருவாகிய ஆதிசங்கரரே, மூல முழு முதல் கடவுள் நாரணனே,என்று தன்னுடுடைய பகவத்கீதை , விஷ்ணு சஹஸ்ரநாமம் ,ப்ரமஸூத்ரம் உரைகளில் அறிதியிட்டு கூறியிருக்கிறார். இதையே நாரதர், அசிதர் ,தேவலர் வியாசர், போன்ற பெரும் முனிவர்களும், ராமானுஜரும், மத்வரும் , நிம்பார்கரும்,,விஷ்ணு சுவாமியும் அறிதியிட்டு கூறியிருக்கிறார்கள்.

நெறைய விஷயம் உள்ளது நண்பரே! படித்து புரிந்துகொள்ள. அனால், நாமெல்லாம் கோவிலுக்கு பொய், பொருள் தா... பொன் தா,..... குடும்பம் தா..என்று பிச்சைதான் கேட்கிறோம். எவருக்கும் பக்தி இல்லை.அதுதான் இங்கு பிரச்சனை


---------------------------
மேஷ ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனையும், ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும், மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும், கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும், சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,
கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,
துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,
தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,
மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,
கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,
மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.

எழுதியவர் : (14-Dec-18, 5:51 pm)
Tanglish : aanmeekam
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே