மனம் மயானம் தேடுகிறது

சுற்றும் முற்றும் யாருமில்லா மையிருட்டு
வெகுதூரத்தில் ஊளையிடும் தெருநாய்
மூக்கைத் துளைக்கும் எரி உடல் நெடி
அர்த்தம் யேதுமில்லா வெட்டியான் பாட்டு
யார் வம்புக்கும் போகா வேலி ஓணான்
பிணம் வந்த பாதையில் சிதறிய வாடாமல்லி

ஏதோ ஒரு புள்ளியில் மயானம் சிறப்படைகிறது
நாம் வாழ்வதாய் கொள்ளும் வாழ்வை விட....

# மனம் மயானம் தேடுகிறது


$வினோ...

எழுதியவர் : வினோ... (17-Dec-18, 9:27 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 233

மேலே