நாம் ஏன் வெட்டியான் இல்லை

நாம் ஏன் வெட்டியான் இல்லை

அவனுக்கு பட்டம் தேவையில்லை
அவன் புகழ்தலை எவரும் விரும்புவதில்லை
அவன் தொழிலில் இலக்கு யேதுமில்லை
ஆயுள் காப்பீடு பற்றிய அக்கறையில்லை
அடுத்த பத்தாண்டுக்கான பட்டியல் இல்லை
மனிதர் முகத்தில் விழிக்கும் கெட்ட சகுனமில்லை
பணிமாற்றம் பற்றிய பயம் இல்லை
யாவற்றுக்கும் மேலாய்
நூறாண்டுக்கு நமக்கு சாவு வரா
எனும் அறியாமை இல்லை...

$வினோ....

எழுதியவர் : வினோ (17-Dec-18, 9:32 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 98

மேலே