என்ன செய்வாய்

~~~~*என்ன* *செய்வாய்?*~~~~
👍👍👍👍👍👍👍👍

பசிக்கழுகின் பார்வை
பச்சிளங் கோழிக்குஞ்சு

இரை தேடும் மயில்
இடறி ஓடும் சிறுபாம்பு

குலை தள்ளிய வாழை
குறி வைத்துச் செல்லும் யானை

பசும்புல் மேயும் மான்
பதுங்கிச் செல்லும் வேட்டைப் புலி

குஞ்சுக்காக இரைதேடும் கரிக்குருவி
குருத்தினில் ஒண்டிக்கொள்ளும் சிறுபுழு

பக்குவ சேமிப்பில் முதியவர் பணம்
பசி போக்க அதைத்திருடும் விடலைப்பையன்

உள்ளத்தில் காதலில்லா இளம்பெண்
உயிர் துறக்க தயார் நிலை காதலன்

பொருப்பான குடிமகனின் பகல்கனவு
போதையினால் போக நேரும் சிறைவாசம்

புயலோடு வீசுகின்ற பெருமழை
புவி வாழ தடுமாறும் வாடல் மரம்

*இவை நடுவே நீயிருந்தால்*

*என்ன செய்வாய்* ?

க.செல்வராசு..

👍👍👍👍👍👍👍👍

எழுதியவர் : க.செல்வராசு (18-Dec-18, 12:42 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : yenna seivaai
பார்வை : 86

மேலே